இந்தியாவின் ரிஷிகேஷில் நிர்வாண வீடியோ எடுத்த பிரெஞ்ச் பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில் தான் தவறு செய்துவிட்டதாக கூறி அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Marie-Helene என்ற 27 வயது பெண் கங்கை நதிக்கரையில் லட்சுமண் ஜூலா பாலம் மீது ஆடையின்றி நிர்வாணமாக ஸ்ட்ன்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட Marie-Helene தன்னுடைய செயலுக்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் கூறுகையில், நான் அந்த வீடியோவை எடுக்கும் போது என்னை சுற்றி யாருமே இல்லை.
நாட்டில் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்தேன்.
இதோடு ஓன்லைனில் மணி நெக்லைஸ் விற்பனை செய்கிறேன், என வணிகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகவும் இவ்வாறு செய்தேன்.
ரிஷிகேஷில் பக்தர்கள் மனம் புண்படும் படி நடந்துக் கொண்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்