ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான்பாஸ் நவகம்புர பிரதேசத்தில் “மோல் சூடி” என்று அழைக்கப்படும் 35 வயதுடைய தீபிகா குமார லக்ஷமி ரன்தெனிகே என்ற பெண்ணே இவ்வாறு கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பெண் ஒருவரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது சுமார் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகம் ஒன்றும் மற்றும் வங்கி அட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வங்கிக் கணக்கில் கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.