ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்ட பிரான்ஸ் இராணுவ வீரர் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸ் இராணுவ ரஷ்யாவுக்கு ஆதரவாக செயற்பட்ட பிரான்ஸ் இராணுவ வீரர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ அமைச்சர் Florence Parly ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு இராணுவ ரகசியங்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ கேணல் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு சில முக்கிய ஆவணங்களை அந்த அதிகாரி பகிர்ந்துகொண்டுள்ளார். இதனால் அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு குறித்த அதிகாரியை DGSI படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவத்திற்கு பின்னர் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகலை நாங்கள் எடுத்துள்ளோம், என்று தெரிவித்துள்ளார்.




















