எகிப்தில் தூக்கத்தில் இருந்த தமது மனைவியை சுத்தியலால் தலையை சிதைத்து கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எகிப்தின் சிவா என்ற கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது.
மனைவியை வெள்ளிக்கிழமை கொல்ல திட்டமிட்டதன் காரணமும் அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் முக்கிய நாள் என்பதால், இறந்தவர்களுக்கு மன்னிப்பு கோருவதற்காக பலர் இறுதி பிரார்த்தனை செய்வார்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.
51 வயதான கயானா நாட்டவரான அந்த நபர் தமது 42 வயதான எகிப்திய மனைவியை தூக்கத்தில் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அவருடன் வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியதாலையே, கொலை செய்ய திட்டமிட்டதாக அந்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் பாரம்பரியம் மற்றும் இறுதி பிரார்த்தனையின் ஒரு பகுதியாக, மரணமடைந்தவர்கள் சடலத்தை சில மணி நேரத்துற்குள் குளிப்பாட்ட வேண்டும்.
இதற்காக, அந்த கிராமத்தில் உள்ள சில பெண்களை அந்த கணவர் அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண்கள், ஒரு சுகாதார அதிகாரியின் ஒப்புதல் இன்றி, தாங்கள் சடலத்தை குளிப்பாட்ட முடியாது என மறுத்துள்ளனர்.
காரணம், அந்த சடலத்தின் தலையில் ரத்தக்காயம் இருந்துள்ளதை குறித்த பெண்கள் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து சுகாதார அதிகாரி வரவழைக்கப்பட்டு, அவர் அந்த சம்பவத்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த பொலிசார், குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி நடந்தவற்றை அவர் பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார். பாரம்பரிய முறைப்படி வாழ்க்கை நடத்தும் எகிப்தின் சிவா கிராம மக்களை பொறுத்தமட்டில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் முதன் முறை என கூறப்படுகிறது.