திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரிய பிரபல நட்சத்திர தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ள நிலையில் பிரிந்ததற்கான காரணத்தை இருவரும் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் வெளியான நான் ஈ திரைப்படத்தில் நடித்தவர் நோல் சீன். இவர் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார்.
அதே போல தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் நடித்துள்ளவர் நடிகை எஸ்தர் நோரன்ஹா. நோலும், எஸ்தரும் கடந்த 2019 ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் சிறிது காலத்திலேயே தம்பதிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தற்போது எஸ்தர் – நோல் தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இந்த தகவலை இருவரும் அதிகாரபூர்வமாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் நோலின் பதிவில், நீண்ட அமைதிக்கு பிறகு எஸ்தருடன் எனக்கு விவாகரத்து ஆகிவிட்டதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.
நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருந்தே இவ்வளவு நாள் இது குறித்து பொதுவெளியில் கூறமுடியவில்லை.
எங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளே விவாகரத்தை நோக்கி பயணிக்க வைத்தது.
இந்த அழகான உறவின் தன்மையை காப்பாற்றுவதற்காக மட்டுமே இதை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளர்.
எஸ்தரின் பதிவில், நாங்கள் இருவரும் கடந்தாண்டு ஜனவரி 3ஆம் திகதி திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்துக்கு பின்னர் சமரசம் செய்ய முடியாத பல சிக்கல்கள் எங்களுக்கு இடையே இருந்ததால் பிரிந்தே வாழ்ந்தோம்.
இதையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் விவாகரத்து கோரி தற்போது அதை நீதிமன்றம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.



















