பிரான்சில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறி முதியவர் ஒருவர் இளைஞரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
பிரான்சில் Saint-Genis-Pouilly என்ற பகுதியில் ஞாயிறன்று இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
74 வயதான முதியவர் ஒருவர் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக நம்பிய 25 வயது இளைஞர் ஒருவர் அந்த முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்களன்று மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
அந்த 74 வயது முதியவரின் நண்பர் ஒருவர் தமது இளைய மகனை வார இறுதி நாளில் தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள கோரியுள்ளார்.
நண்பரின் கோரிக்கையை ஏற்று அந்த 74 வயது முதியவரும் சிறுவனை தம்முடன் தங்க வைத்துள்ளார்.
ஆனால் ஞாயிறன்று காலை, தொடர்புடைய சிறுவனை அழைத்துச் செல்ல அவனது உறவினர் ஒருவர் அந்த முதியவரின் குடியிருப்புக்கு வந்தபோது, சிறுவன் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்துள்ளான்.
இதை நேரிடையாக காண நேர்ந்த அந்த 25 வயது இளைஞர், இச்சம்பவத்தை தவறாக புரிந்து கொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மட்டுமின்றி, பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சேரும் முன்னரே, அந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
குற்றுயிராக கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்த பொலிசார், இளைஞரிடமும், பாதிப்புக்கு உள்ளானதாக கருதப்படும் சிறுவனிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுவன் பொலிசாரிடம் நடந்தவற்றை ஒப்புவிக்க, பொலிசார் தற்போது அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.