முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியினால் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதானிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், மைத்திரிக்கு பதவி வழங்குவது தொடர்பில் பிரதமரினால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் பதவி ஒன்றை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பதிலாக வேறு பதவி ஒன்றை உருவாக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.