நாட்டில் 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முற்படுவதானது, சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் அதிக அக்கறை காட்டிவருகிறது.
இது தொடர்பில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதில் வழங்கிய அவர்,
19 ஆவது திருத்தச்சட்டமானது நாட்டுக்கு தேவையான ஒன்றாகும். அதில் உள்ள குறைப்பாடுகளை நீக்கவே நாம் முற்பட வேண்டும்.
இதனை செய்யாமல், அதில் உள்ள ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இவர்கள் முற்படக்கூடாது.
நாம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கவே நாம் முயற்சிக்கிறோம். இதன் ஊடாக அரசாங்கம் பலமடைந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
இப்படியான ஒரு திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முற்படுவதானது, சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது என்றார்.



















