ஸ்ரீலங்காவில் தொழிலற்ற ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்குள் 10 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட, க.பொ.த சாதாரண தரம் அல்லது முறைசார் கல்வியை பெறாதவர்களே உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் 22ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
முறைசார் கல்வி அல்லது தொழில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் கீழ் தொழில்களை உருவாக்கி கொடுக்கும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இதன்பின் தொழில் திறமைகள் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 35ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இவர்கள் 10 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றினால் ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















