இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நபர்களை பல நாடுகள் அரச ஆட்சி நிர்வாக செயற்பாடுகளில் சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொரதொட்ட- துன்ஹதஹேன பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முடியும் எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நபர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ள பெறுப்பு வாய்ந்த முக்கிய அமைச்சு பதவியை அவருக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வரும் நிலையில் அமைச்சர் வீரவங்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















