கண்டி, பல்லேகலை பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று மீண்டும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 07.06 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்வு மஹகனதராவையில் உள்ள நில அதிர்வு அளவில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இந்த இயற்கையான நில அதிர்வா அல்லது வேறு அதிர்வினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் கண்டி பல்லேகல உட்பட பிரதேசங்கள் சிலவற்றில் நில அதிர்வு உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















