கனடாவில் வெஸ்ட்ஜெட் விமானங்களில் 2 பயணிகள் முகக்கவசம் அணிய மறுத்ததால், அவர்களுக்கு தலா 1000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக கனடாவில் முக்ககவசம் மக்கள் கூடும் பொது இடங்களில், முக்கிய பொது போக்குரவரத்துகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் WestJet பயணிகள் விமானத்தில் பயணிகள் 2 பேர் முகக்கவசம் அணிய மறுதத்தால் தலா ஒருவர் 1000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமான ஊழியர்கள் பல முறை அறிவுறுத்தியுட்ம், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் Calgary-யில் இருந்து Ontario-வின் Waterloo-வுக்கு சென்ற போது ஒரு பயணிக்கும், அதன் பின் ஜுலை மாதம் Vancouver-வில் இருந்து Calgary-வுக்கு சென்ற போது ஒரு பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கலாம் என்று கனடா போக்குவரத்து துறை அறிவித்திருந்ததையடுத்து, முதல் முறையாக பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அபராதம் மட்டுமின்றி, இந்த விதிமுறையை பின்பற்ற மறுப்பவர்களுக்கு ஓராண்டு வரை பயண தடையும் விதிக்கப்படலாம் என்பது நினைவுகூரத்தக்கது.