ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பேட்டா கோட்டால கிராமத்தில் நாகேந்திரன் என்ற இளைஞரும் சுப்ரியா என்ற இளம் பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நாகேந்திரன் காதலி சுப்ரியாவை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதனையடுத்தொடர்ந்து, நாகேந்தரன் லஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் சுப்பிரியா தான் ஏமாற்றப்பட்டதால் மிகவும் அதிர்ச்சியடைந்து மிகவும் மன உளைச்சளில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று, சுப்ரியா ஆசிட் பாட்டிலை எடுத்துக்கொண்டு சாலையோரம் நின்றிருந்தார், அப்போது முன்னாள் காதலன் நாகேந்திரன் அவ்வழியாக வந்ததை கண்ட சுப்ரியா அவரின் கையில் வைத்திருந்த ஆசிடை நாகேந்திரனின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டார்.
வலி தாங்காமல் துடித்த நாகேந்திரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் வீசிய சுப்ரியா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.