கொரோனா வைரஸை வீழ்த்த ஆண்கள் தங்கள் இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வர வேண்டும் என பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) வலியுறுத்தியுள்ளது.
ஏனெனில் பெண்கள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இரத்த பிளாஸ்மாவை தானம் செய்பவர்களாக உள்ளனர் என NHS குறிப்பிட்டுள்ளது.
பெண் நோயாளிகள் இரத்த பிளாஸ்மாவை வழங்க மிகவும் தயாராக உள்ளனர் மற்றும் ஒட்டுமொத்த நன்கொடையாளர்களில் 63 சதவீதம் அதாவது 73,369 பெண்கள் தானம் செய்து இருக்கின்றனர், பெண்களுடன் ஒப்பிடும் போது 37 சதவீதம் 42,809 ஆண்கள் இரத்த பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இருப்பினும், பெண்களின் பிளாஸ்மா குறைந்த மதிப்புமிக்கது, ஏனெனில் பெண்களை விட ஆண்களுடைய பிளாஸ்மா மூன்று மடங்கு அதிக அளவு ஆன்டிபாடிகளைக் கொண்ட மாதிரியை உற்பத்தி செய்யும் என NHS தெரிவித்துள்ளது.
இலையுதிர்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்னதாக வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வருமாறு NHS கேட்டுக் கொண்டுள்ளது.