நாடாளுமன்றத்திற்கு தன்னை தெரிவு செய்து அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இதுவரை தன்னால் முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இது சம்பந்தமாக அடுத்த சில தினங்களில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் அரசியலுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்துள்ளதால், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்றும் தேவை இருப்பதாகவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் அரசியலுக்குள் விளையாட்டுக்கள் இருப்பதாகவும், நேர்மையாக மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்ததாகவும், இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















