பிளாஸ்டிக் பொருட்களை கடலில் தூக்கி போடுவதால் நீரில் வாழும் ஜீவன்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதை கூறும் வகையில் நடிகர் அருண்விஜய் மனதை உருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அருண்விஜய்.
இவர் நடிகை வனிதாவின் சகோதரர் ஆவார். தினமும் கடற்கரைக்கு தனது செல்லப்பிராணியை அழைத்து செல்லும் வழக்கம் அருண்விஜய்க்கு உண்டு.
இந்த நிலையில் அருண்விஜய் சமூகவலைதளத்தில் கடற்கரையில் இறந்து கிடக்கும் கடல் ஆமை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடற்கரையில் என்ன கரை ஒதுங்கியுள்ளது என பாருங்கள்!
மனிதர்களான நம்மால் வீசப்பட்ட அளவிட முடியாத அளவிலான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் வெளியேற்றப்படுவதைக் காண மிகவும் வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.



















