தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவி, முறையற்ற பழக்கத்தை கைவிடும் படி கணவர் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்தூர் நகரம் பிரசாந்த நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில், பணிபுரிந்த போது, திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், திவ்யா கடந்த சில ஆண்டுகளாகவே வினோத் மற்றும் தன போன்ற ஆண்கள் பலருட முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார்.
இதை அறிந்த கணவன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் மனைவி கணவனின் பேச்சை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்ததால், மனம் உடைந்த கணேஷ், தன்னுடைய நான்கரை வயது மகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியவர, இது தொடர்பாக திவ்யா, வினோத், தனா, சோபியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















