பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் போர்ச்சுகலை தங்கள் பாதுகாப்பான பயண பட்டியலில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் பரவலை தடுப்பதற்காக பிரித்தானியாவில் பொது முடக்கம், சில தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது.
இருப்பினும் நாட்டில் கொரோனா தொற்று விகிதம் அந்தளவிற்கு குறைந்த பாடில்லை. நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நோயின் தீவிரம் இருந்து தான் வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி தான் என்றாலும், அதை கண்டுபிடிக்கும் வரை சில விதிமுறைகளை பின்பற்றினால் தான் நோயின் பரவலை தடுக்க முடியும்.
அந்த வகையில், தற்போது கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை போர்ச்சுகல் நாட்டை தங்கள் பாதுகாப்பான பயண பட்டியலில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளன.
இதனால் போர்ச்சுகலில் இருந்து வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், பிரித்தானியா முழுவதும் மாறுபட்ட விதிகள் பயணிகளை குழப்புவதாக கூறப்பட்ட பின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்காட்லாந்தின் இந்த புதிய விதிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு நடைமுறைக்கு வந்தன, அதே நேரத்தில் கிரேக்கத்திலிருந்து திரும்பும் பயணிகள் வியாழக்கிழமை முதல் சுய தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.



















