ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய சில்வாவின் மூத்த சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனஞ்சய சில்வாவின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கல்கிஸை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை தாக்குதல் நடத்தியதாக முறையிட்ட குறித்த சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.




















