பிரான்சில் கொரோனா சூழல் கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், அதே நேரத்தில் இரண்டாவது அலை தவிர்க்கப்படக்கூடியதே என்கிறார்.
பிரான்சில் வரலாறு காணாத அளவில் புதிதாக கொரோனா தொற்றுக்கள் உருவாகி வருவது கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ளார் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran.
அதே நேரத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்கப்படக்கூடியதே என்றார் அவர்.
தற்போது கொரோனா பெருகும் வீதம் 1.2 ஆக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், வசந்த காலத்தில் அது 3.2 முதல் 3.4 ஆக இருந்தது என்கிறார்.
ஆகவே, வைரஸ் மெதுவாகத்தான் பரவுகிறது, ஆனால், அது இன்னமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த விடயம்தான் கவலையை அளிக்கிறது என்கிறார் Olivier Veran.