பாலிவுட் சினிமாவில் 90களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி பலரின் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா பத்ரா. தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
அடுத்தடுத்த படங்கள் பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். 90களில் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்ர்.
இதையடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் போன்ற படங்களில் நடித்து இந்தி பக்கம் திரும்பினார்.
இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகராக திகழ்ந்து வரும் நவாப் ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்துஊர்சுற்றி சில புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டும் வந்தனர்.
கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து தற்போது லாக்டவுன் நேரத்தினை வீட்டிலேயே கழித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் மெலிந்து காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.