லடாக் பகுதியில் இந்திய ராணுவம், இந்திய – சீன எல்லையை தாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக சீன இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஷோ லிஜ்யான் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:
லடாக் பகுதியில் இந்திய ராணுவம், இந்திய – சீன எல்லையை தாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்தியா நடந்துகொண்டுள்ளது.
சமாதான உடன்படிக்கை மூலமாக மட்டுமே இதற்கு தீர்வுகாண வேண்டுமே தவிர, அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் எல்லை பிரச்னை மேலும் அதிகரிக்கும்.
இனி அறிவிப்பு இன்றி, இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் சீனாவும் திருப்பித் தாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















