அம்பாறையில் சிறிய ரக டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்றிரவு கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கொள்கலன் ஊர்தியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.