தான் ஓய்வுபெறப் போவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையுமில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
2022ஆம் ஆண்டுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற போகிறார் என சில தினங்களின் முன்னர் சமூக ஊடகங்களில் செய்தி பரவியிருந்தது. இதனை பிரதமர் நிராகரித்து, அது வதந்தியென தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளிற்கு தன்னை பிரதமராக செயற்பட மக்கள் தெரிவு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது பொறுப்பு. அதை பாதியில் விட்டுச் செல்ல மாட்டேன். அதனால், மக்கள் அளித்த ஆணையின்படி செயற்படுவேன். அதற்கு முன்னர் ஓய்வுபெற மாட்டேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.