பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்டிருந்த மாணவர்களிற்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அக்மீமன பகுதியில் ஒக்ரோபர் 29 ஆம் திகதி முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்டபோது, 28 இளவயதினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 2 யுவதிகள், 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காலி மேல் நீதிமன்றத்தில் நேற்று (9) யுவதிகள் உள்ளிட்ட 9இளையவர்கள் முன்னிலையாகினர்.
உயர்தரத்தில் கற்கும் 5 மாணவர்களிற்கு 1,500 ரூபாவை அரச கட்டணமாகவும், 500 ரூபாவை அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
யுவதிகள் உள்ளிட்ட 4 இளையவர்களிற்கு 1,500 அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
29 ஆம் திகதி அக்மீமன பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு ஹோட்டலில் விருந்தில் கலந்து கொண்டிருந்த 28 இளைஞர்களை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். மொரட்டுவ, அம்பாறை, அனுராதபுரம், மாத்தளை, பதுளை, குருநாகல் மற்றும் கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள்.
பிரதிவாதிகள் மீது தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுதல் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.