இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.