பிரான்சில் பொலிசர் உடை அணிந்து பொலிசாரை நிறுத்தி விசாரணை செய்த பொலிசா சாமியார் கைது செய்யப்பட்டார்.
பிரான்சின் Maisons-Alfort (Val-de-Marne) நகரில், இருக்கும் Avenue de la République வீதியில் இரண்டு போலி பொலிசார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் காவல்துறை ஆடை அணிந்து, கையில் ‘ப்ளாஷ்’ விளக்குகள் வைத்துக்கொண்டு, வீதிகளில் சென்றவர்களை விசாரித்துக்கொண்டிருந்தனர். சிலரிடம் இருந்து பணம் லஞ்சமாக கூட பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் இந்த ‘கொள்ளை’ நீடிக்கவில்லை. நள்ளிரவு 1 மணி அளவில், பேருந்தில் பயணித்த ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் கடமை முடித்துக்கொண்டு, சாதாரண உடையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த உண்மையான காவல்துறை அதிகாரி ஆவார்.
அவரினை தடுத்து, விசாரித்துக்கொண்டிருந்த போது, இவர்கள் உண்மையான காவல்துறை அதிகாரிகள் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார்.
பின்னர், தனது சகோத அதிகார்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இந்த போலி அதிகாரிகளிடம் தாம் ஒரு காவல்துறை அதிகாரி என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் அதற்குள்ளாக சம்பவ இடத்துக்கு வந்திருந்த மேலதிக அதிகாரிகள் இரண்டு போலி காவல்துறையினரையும் கைது செய்தனர். அவர்களது மகிழுந்தில் கை விலங்கு ஒன்றும், சில தங்க நகைகள் மற்றும் சில வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.