இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்து 290 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.
இதன்படி, கொவிட்-19 காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளதாக இந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.