இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர். திவுரும்பிட்டி பகுதியில், பாரவூர்தி ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.