யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி பகுதியில் நிலத்தடி பதுங்கு குழி ஒன்று நேற்று (15) கண்டுபிடிக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிசார் தெரிவித்தனர்.
உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் ஒருவர் தனக்கு சொந்தமான காணியில் நிர்மாண பணிகளிற்காக நிலத்தை அகழ்ந்தபோது, நிலத்தடி பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டில் இந்த நிலத்தடி பதுங்கு குழி கட்டப்பட்டதாகவும், போரின் போது புலிகள் அல்லது இராணுவத்தினரால் கட்டப்பட்டிருக்கலாமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.