சினிமாவில் இளம் நடிகைகள் அதிகளவில் அறிமுகமானாலும் ஒரு சிலருக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கிறது அப்படி கிடைக்காதவர்கள் வெப்சீரிஸ் பக்கம் செல்கிறார்கள்.
அந்த வகையில் 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி. அதற்குப் பின்னே நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் பதியும் அளவிற்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டது, நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்த வருடம் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதியின் ராசியான நடிகை என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது உடல் எடையை குறைத்து க்ளாமர் பக்கம் செல்கிறார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அங்கங்கள் தெரியும் படியான ஆடை அணிந்து மோசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
புகைப்ப்டத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.