கரீபியன் தீவில் இறுதி சடங்கு சேவை வழங்கும் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் சான் ஆண்ட்ரேஸில் சடலங்கள் குவிந்து கிடப்பதாக அத்தீவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கொலம்யிய தீவான சான் ஆண்ட்ரேஸில் இறுதி சடங்கு சேவை வழங்கும் பார்லரின் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கொலம்பியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
அவரது மகனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது, எனவே ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இறுதி சடங்கு சேவை பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது நிர்வாகம் சடலங்களை சேமிக்க குளிரூட்டப்பட்ட லொறிரிகளை வாங்க முடிவு செய்துள்ளது என சான் ஆண்ட்ரேஸ் தீவின் ஆளுநர் எவர்த் ஹாக்கின்ஸ் கூறினார்.
சுமார் 75,000 மக்கள் தொகை கொண்ட கொலம்பிய தீவில் இதுவரை ஒன்பது பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
கொலம்பியாவில் 7,35,000க்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, உலகில் அதிக கொரோனா வைரஸ் வழக்குகளில் பதிவான நாடுகள் பட்டியலில் கொலம்பியா ஆறாவது இடத்தில் உள்ளது.



















