தாய்லாந்தில் நாடாளுமன்ற கூட்டத்தின் போது, எம்.பி. ஒருவர் ஆபாச படம் பார்த்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடந்த வியாழக் கிழமை நாடாளுமன்ற கூட்டத்தின் போது, பட்ஜெட் குறித்து வாசிக்கப்பட்டது.
அப்போது Ronnathep Anuwat எனப்படும் எம்.பி. தன்னுடைய செல்போனில் ஏதோ பார்த்தபடி இருந்துள்ளார். இதனால் அவரை உற்று நோக்கிய போது, செல்போனில் ஆபாச படம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அவர், செல்போனில் அந்த ஆபாச படத்தை பார்த்தபடி இருந்தார். இதனால் அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அதுமட்டுமின்றி ஒரு பட்ஜெட் வாசிப்பின் போது, எம்.பி. நடந்து கொள்ளும் விதம் இது தானா என்ற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து அவரிடம் கேட்ட அவர் படம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் நான் ஏன் பார்த்தேன் என்று ஒரு வினோதமான காரணத்தை கூறினார்.

அதில், தனக்கு வந்த செய்தி ஒன்றில் பெண் ஒருவர் உதவி கேட்கிறார், பணம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் அதை விரிவாக பார்க்கும் போது, அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா? வற்புறுத்தப்படுகிறாரா? அவரை சுற்றியுள்ள சூழல் போன்றவற்றை கவனிக்கவே பார்த்ததாக கூறியுள்ளார்.
ஆனால், சபாநாயகர் Chuan Leekpai, இது ஒரு தனிப்பட்ட விஷயம், எம்.பி.க்கள் கூட்ட அறையில் தங்கள் தொலைபேசிகளில் என்ன பார்க்க முடியும், பார்க்க கூடாது என்பது குறித்து எந்த விதிகளும் இல்லை.

இந்த விவகாரம் குறித்து எந்த எம்.பி.க்களும் புகார் செய்யவில்லை, எனவே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறிவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.



















