பிரித்தானியாவில் 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
பிரித்தானியாவின் West Yorkshire-ல் இருக்கும் Keighley-ஐ சேர்ந்த Kekshan Rashid என்ற 14 வயது சிறுமி நேற்று பள்ளிக்கு சென்று, அதன் பின் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அவர் கடைசியாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு காணப்பட்டார். அதன் பின் அவர் காணவில்லை.
இதனால் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சிறுமியை தேடியுள்ளனர். இதையடுத்து West Yorkshire தற்போது சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
West Yorkshire காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், காணாமல் போன சிறுமியைத் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், Keighley பகுதியில் சடலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்,
இது குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணமல் போன இந்த சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.
Spring Gardens Lane-ல் உள்ள Holy Family பள்ளியில் இருந்து திரும்ப தவறிய இவர், கடைசியாக பிற்பகல் 1.50 மணிக்கு பள்ளியில் காணப்பட்டார். அதன் பின் அவர் காணமல் போயுள்ளார்.
அவரைப் பார்த்த எவரும் உடனடியாக பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்,
அவர் 5 அடி 4 உயரம், பழுப்பு நிற கண்கள் மற்றும் கடைசியாக பார்த்தபோது கடற்படை கால்சட்டை, மற்றும் ஒரு கடற்படை PE சட்டை (பள்ளியின் PE சீருடை) அணிந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.