இந்தியாவில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் திவேதி. இவர் மனைவி மம்தா. இந்த தம்பதியின் மகள் அங்கிதா (24).
அங்கிதாவுக்கு பெற்றோர் திருமணம் பேசி முடித்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருந்தது.
ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அங்கிதா அது குறித்து பெற்றோரிடமும் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ராஜேந்திரன் பணிக்கு சென்ற நிலையில் மம்தாவும் கடைக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் தனது அறையில் அங்கிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று காலை அங்கிதாவின் சகோதரர் அங்கூர் தனது சகோதரி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அலறினார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அங்கிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
மேலும் அங்கிதா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னுடைய விருப்பத்தில் பேரில் தான் தற்கொலை செய்து கொள்கிறேன், என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. மீண்டும் இதே வீட்டில் நான் பிறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என எழுதப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில், அங்கிதாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தது உறுதியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.



















