அமெரிக்காவில், 400 மைல் தொலைவுக்கு, துர்நாற்றம் வீசும் சூட்கேஸ்களுடன் பயணித்த ஒருவர், சூட்கேசில் இருந்தது தனது காதலியின் உடல் என்றும், தன் காதலியை பிரிய மனமில்லாததால் அவளது உடல் பாகங்களை வீட்டுக்கு கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது பெயர் Melvin Martin Jr. (30) என்று பொலிசார் தெரிவித்துள்ளதோடு, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அவரால் கொல்லப்பட்ட அவரது காதலியின் பெயரை பொலிசார் இப்போதைக்கு வெளியிட இயலாது என்று கூறிவிட்டனர்.
கென்டக்கியிலிருந்து இல்லினாய்சுக்கு பேருந்தில் அந்த சூட்கேஸ்களைக் கொண்டுவந்த Melvin, அவற்றை தனது அறையில் வைத்துவிட்டு, ஒரு வாரமாக அக்கம் பக்கம் நகராமல் இருந்ததால் அவரது குடும்பத்தினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர் எப்போது வெளியே போவார் என்று காத்திருந்த அந்த குடும்பம், அந்த நபர் நூலகம் ஒன்றிற்குச் சென்றதும், அந்த சூட்கேஸ்களில் என்ன இருக்கிறது என்று பார்க்க விரைந்திருக்கிறார்கள்.
துர்நாற்றம் வேறு வீச, சூட்கேஸ்களைத் திறந்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள், காரணம், அந்த சூட்கேஸ்களில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
உடனே, அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, நூலகம் விரைந்த பொலிசார் Melvinஐக் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், Melvin தனது 31 வயது காதலியுடன் ஏற்பட்ட சண்டையின்போது, காதலியை கொன்று துண்டு துண்டாக வெட்டியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
காதலியை துண்டு துண்டாக வெட்டிய Melvin, அவரது உடலின் ஒரு பகுதியை Louisvilleஇல் உள்ள ஒரு பூங்காவில் போட்டுவிட்டு, அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி, மண்டையோடு மற்றும் உள்ளுறுப்புக்களை சூட்கேசில் அடைத்து வீட்டுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து Louisville பூங்காவுக்கு சென்ற பொலிசார், அவரது காதலியின் உடலை புதன் கிழமையன்று கைப்பற்றினர்.
தன் காதலி தன்னுடனேயே இருக்கவேண்டும் என நினைத்ததால், அவளது உடல் பாகங்களை தன் வீட்டுக்குக் கொண்டுவந்து வைத்திருந்ததாக Melvin தெரிவித்துள்ளார்.
தலைமறைவான குற்றவாளியாக தேடப்பட்டு வந்த Melvinஐ தற்போது Kentuckyக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.