சோமாலியாவில் 19 வயது இளம்பெண்ணை 11 பேர் சீரழித்து கட்டிடத்தில் கீழே தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Hamdi Mohamed Farah என்ற 19 இளம்பெண் சோமாலியாவின் Mogadishuல் உள்ள பெரிய கட்டிடத்தில் 11 பேர் கொண்ட கும்பலால் கடந்த 11ஆம் திகதி சீரழிக்கப்பட்டார்.
பின்னர் ஆறாவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்பள்ளிப்படிப்பை முடித்துள்ளHamdi அடுத்தாண்டு கல்லூரில் சேர நினைத்த நிலையிலேயே இந்த கோரமான முடிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 11 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.