குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் பிரபல நடிகை என்ற பெயரை பெற படவாய்ப்புகள் அமைந்தால் தான் அப்படியாக நடக்கும். அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தில் நடித்து அதன்பின் அவருடனே ஜோடிபோட்டு சில படங்களில் நடித்தவர் தான் நடிகை மீனா.
தென்னிந்திய மொழியில் ராணியாக வாழ்ந்தவர் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி, அஜித் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டார். விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய மீனா, அவருடன் இணைந்து நடிக்க முடியவில்லை என தற்போது வரை வருத்தப்படுவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க 44 வயதை எட்டிய மீனாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதை பார்த்து இளம் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தற்போது உடல் எடையில் கவனம் செலுத்தும் மீனா உடல் எடையை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் வைத்து கொண்டு வருகிறார்.
மீனா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது மீண்டும் நடிக்கும் வாய்ப்பை பெற்று அசத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் மற்றும் மீனா ஜோடி மலையாள சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நிலையில் மீண்டும் இந்த ஜோடி என உள்ளது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.



















