கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கெப்பித்திக்கொல்லாவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவ வீரரை இலகு ரக வாகனம் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் மீட்கப்பட்டு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவ்விபத்தில் கெப்பித்திக்கொல்லாவ பகுதியை சேர்ந்த அமரசேன வயது28 என்ற இராணுவ வீரரே உயிரிழந்தவர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.