திருச்சி மாவட்டம் மணப்பாறையை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் என்ற இந்தியன் வங்கி காசாளர், வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி, அந்த பெண்களுடன் 400க்கும் மேற்பட்ட ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்துவந்துள்ளார். ஆபாசப் படங்கள் ஏற்றி வைத்த லேப்டாப், சிடி மற்றும் ஹார்டு டிஸ்க்கை எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வரும் இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாளிலிருந்து எட்வின் ஜெயக்குமார் தன் மனைவியுடன் பழகுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. எட்வினின் கவனம் முழுமையாக அவரின் செல்போனில் இருந்துள்ளது. இதனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மனைவி, எட்வின் ஜெயக்குமாரின் பீரோவைத் ஆராய்ந்து பார்த்து அதிர்ந்துபோனார். எட்வினின் மனைவி அவரின் பீரோவை திறந்து பார்த்த போது அதில் 12 செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் இருந்துள்ளது. செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆராய்ந்து பார்த்த மனைவிக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளது.
மனைவி ஆராய்ந்த செல்போன் மற்றும் லேப்டாப்பில் பல பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பல புகைப்படம் மற்றும் வீடியோக்களில் எட்வின் ஜெயக்குமார் வேறு சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆதாரங்களும் சிக்கியுள்ளது. அத்தோடு பல பெண்களுடன் அவர் அந்தரங்கமாகப் பேசிய ஆடியோவும், அவர் சாட் செய்த மெசேஜ்களும் இருந்துள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாக அவர் மனைவி கூறியுள்ளார். கணவனின் அந்தரங்கம் பற்றி அறிந்த மனைவி, பொலிசாருக்கு தகவல் சொல்லவே. அவர்கள் எட்வினை லாடம் கட்டி விசாரித்து வருகிறார்கள்.