தலிபான் போராளிகளை குறிவைத்து அரசாங்கம் நடத்திய இரட்டை விமானத் தாக்குதல்களில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதல் தாக்குதல் தலிபான் தளத்தைத் தாக்கியது, ஆனால் இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பொதுமக்கள் கூடியிருந்ததால் அவர்கள் உயிரிழந்தனர் என குண்டுஸ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பாத்திமா அஜீஸ் தெரிவித்துள்ளார்.
கானாபாத் மாவட்டத்தில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேரைக் காணவில்லை என்று அவர் கூறினார்.
இருப்பினும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் அடங்கலாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆக என அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இரண்டு சாட்சிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் மேலும் 6 பொதுமக்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விமானத் தாக்குதல்கள் தலிபான் போராளிகளைக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்பான அறிக்கைகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



















