மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவின் மனைவி கடந்த வாரம் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாமல் ராஜபக்ஷ, தனது மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது, புதிய வாரிசுக்கு அவரது இல்லத்தில் குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து நேற்றுதான் வைத்தியசாலையில் இருந்து மனைவியையும் மகனையும் நாமல் ராஜபக்ஷ, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.