ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, ஹைதராபாத்தை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்ன் மூன்றாது போட்டி இன்று நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தெரிவு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார்.
36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆரோன் பிஞ்ச் 29 ஓட்டங்களிலும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் கோஹ்லி 13 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
இதனால் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர்
6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
அந்த ஜோடி ஹைதராபாத் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ரன்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் திணறியது.
களத்தில் சந்தீப் சர்மா, டி நடராஜன் களத்தில் இருந்தனர். 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் 19.4 ஓவரில் டெயில் ஸ்டெயின் வீசிய பந்தை சந்தீப் சர்மா சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த கோஹ்லில் கேட்ச் பிடித்தார்.
இதனால், ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.