தமிழகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பாடந்துரை கிராமம். இங்கு வசிப்பவர் சஜீவன். வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
இவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இளநிலை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார்.
சரண்யா வழக்கம்போல் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
சம்பவம் குறித்து தேவர்சோலை பொலிசார் வழக்குப்பதிந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாணவி தற்கொலை செய்த அறையில் சோதனை செய்தபோது சுவற்றில் ஆங்கிலத்தில் ’சாரி டு ஆல்’ என எழுதி இருந்தது. அவரது ஸ்மார்ட் போன் திறக்க முடியாத நிலையில் லாக் செய்யப்பட்டிருந்தது.
போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பிவிட்டு விசாரித்து வருகின்றனர்.