தமிழகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசி குற்ற செயல்களில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் காவல்நிலையத்திற்கு பெண் ஒருவரு, தனக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வருவதுடன், போனில் ஆபாசமாகப் பேசி வருகிறார்.
தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையேன்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் பொலிசாரின் உதவியோடு, கணேஷ் நகர் பொலிசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
அதில், அழைப்பு வந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) எனத் தெரியவந்ததுள்ளது.
காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திகேயன் இதற்கு முன்பே, இதே எண்ணின் மூலம் கல்லூரி மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாகப் பேசி அவர்களை மிரட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கார்த்திகேயன் மீது பெண் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கார்த்திகேயன் பயன்படுத்திய போன் நம்பர் அவருடைய பெயரில் வாங்காமல் தன் நண்பரின் பெயரில் சிம் வாங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெண்களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி அவர்களை தன் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.
அப்படியில்லையென்றால், உன்னுடைய அந்தரங்க விஷயங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளிடம் தான் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இவர் மேல் புகார் அளிக்காததால், இதையே தன் தொழிலாகவும் பின்பற்றி வந்துள்ளார்.
இப்போது ஒரு பெண் அளித்த புகாரின் பெயரில் தான் இவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம். வேறுயாரும் இதுபோல் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினர்.