பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என கொழும்பு ஆங்கில ஊகடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சாத்தியமான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடுவார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் இணையம் ஊடாக நடைபெறும் இந்த சந்திப்பு காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மீனவர்கள் பிரச்சினை குறித்து இதன் போது பேசுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.