சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக புதிய ரோபோக்களை அந்நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை செய்வதற்காக மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உட்புறம் படிந்திருக்கும் நீர்மப் பொருட்களை எடுத்து சோதனை செய்யப்படுகிறது.
இந்த சோதனையை மேற்கொள்வதற்காக சிங்கப்பூா் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப்பூா் பொது மருத்துவமனை ஆகிய இரண்டும் பையோபோ சா்ஜிகல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோபோவை உருவாக்கியுள்ளன.
”ஸ்வோபோ” என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தானாகவே சிந்தித்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயத்தை குறைக்கவே ரோபோவை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.