இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
அதனை சதொட உட்பட கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகையின் நிறை 1,068,314 கிலோம் ஆகும். எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நாட்டின் மஞ்சள் தேவையை நிறைவேற்றுவதற்கு இந்த மஞ்சள் தொகையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருடாந்த பயன்பாட்டுக்காக 7500 மெட்ரிக் டன் மஞ்சள் தேவைக்கப்படுகின்றது. எனினும் இலங்கையில் 1200 மெட்ரிக் டன் மஞ்சள் உற்பத்தியே மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும் எதிர்வரும் வருடம் முதல் மஞ்சள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.