கண்டியின் புவெலிகடவில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை 09.30 மணியளவில் கட்டிட உரிமையாளர் அனுர லெவ்கே கண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 20 ஆம் திகதி அதிகாலையில் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில், அயல் வீடு தரைமட்டமாகி, அங்கிருந்த குழந்தை உட்பட ஐந்து பேர் இடிபாடுகளிற்குள் சிக்கினர்.
இரண்டு பேர் மீட்கப்பட்டனர். பின்னர், 1 ½ மாத குழந்தை மீட்கப்பட்டு, கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது.
குழந்தையின் பெற்றோரின் சடலங்கள் பின்னர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.