அமெரிக்காவில் டிக் டாக் அப்பிளிக்கேஷனை நிரந்தரமாக தடை செய்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
தடை செய்வது தடுக்கப்படவேண்டும் எனில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு டிக் டாக்கினை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான கால எல்லையாக செப்டெம்பர் மாத இறுதிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க நீதிபதி ஒருவர் இக் காலப் பகுதியின் பின்னர் டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளார்.
சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கினை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் நிலையில் இத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.